Published:Updated:

நீலகிரி: `எங்க உயிரை நெனச்சு பயந்தா, எதுவும் நடக்காது!’ - பேரிடரை எதிர்த்து களமாடிய மீட்புக் குழு

rescue team
rescue team

இடைவிடாது கொட்டித்தீர்த்த பெருமழையும், மணிக்கு 80 கி.மீ வேகத்தில் சுழன்றடித்த காற்றும் நீலகிரியில் பேரிடருக்கு வகை செய்தது‌.

திரும்பும் பக்கமெல்லாம் மரங்கள் முறிந்தும், வேருடன் பெயர்ந்தும் விழுந்துகொண்டிருந்தன. அனைத்தும்‌ டன் கணக்கான எடை கொண்ட ராட்சத மரங்கள். வெளியில் தலைக்காட்டவே மக்கள் அஞ்சி நடுங்கினர்.

மரங்கள் விழும்‌ ஆபத்து இருப்பதால் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். மரங்கள் இருக்கும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கையையும் விடுத்தது மாவட்ட நிர்வாகம்.

குடியிருப்புகள், சாலைகள், மின்கம்பங்கள் என எல்லா இடங்களிலும் மரங்கள் கீழே பெயர்ந்து கிடந்தன. கண்ணை மறைக்கும் பனி மூட்டம், சுழன்றடிக்கும் காற்று, இடைவிடாது கொட்டும் மழை, வாட்டும்‌ குளிர் என எதையும் பொருள்படுத்தாமல் சிலர் பேரிடரை‌ எதிர்கொள்ள களமிறங்கினர்.

நீலகிரி: `எங்க உயிரை நெனச்சு பயந்தா, எதுவும் நடக்காது!’ - பேரிடரை எதிர்த்து களமாடிய மீட்புக் குழு

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களோடு கோவை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி எனத் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்த தீயணைப்பு வீரர்கள் இவர்களோடு கைக்கோத்தனர்.

பேரிடர் மீட்புக் குழுவினர், நெடுஞ்சாலைப் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் மின் வாரிய ஊழியர்கள் என அசுர பலத்தோடு களமிறங்கினர்.

நீலகிரி: `எங்க உயிரை நெனச்சு பயந்தா, எதுவும் நடக்காது!’ - பேரிடரை எதிர்த்து களமாடிய மீட்புக் குழு

மரம் விழுந்துள்ளதாகவும், மண் சரிவு ஏற்ட்டுவிட்டதாகவும் மக்களிடம் தொடர்ந்து வந்த அழைப்புகளை ஏற்றுக்கொண்டு, குறுக்கே கிடந்த ராட்சத மரங்களை அறுத்து வீசுகின்றனர்.

ஊட்டி கூடலூர் சாலையில் கொட்டும் மழையில் குறுக்கே விழுந்து கிடந்த பெரிய யூகலிப்டஸ் மரத்தை இயந்திரத்தால் அறுத்துக்கொண்டிருந்த குழைவைச் சேர்ந்த வீரர் ஒருவர் குளிரில் நடுங்கியவாறே பேசினார், ``நேத்த விட இன்னக்கி நிலம மோசமா இருக்கு. காலைல இருந்து இந்த ரோட்ல 50-க்கும் அதிகமா மரம் விழுந்துருக்கும். போக்குவரத்தே நிறுத்தியாச்சு.

நீலகிரி: `எங்க உயிரை நெனச்சு பயந்தா, எதுவும் நடக்காது!’ - பேரிடரை எதிர்த்து களமாடிய மீட்புக் குழு

சுத்தி நிக்குறது எல்லாமே வயசான மரங்கள். எப்போ வேணுமானாலும்‌ நம்ம மேல விழலாம். எதைப்பத்தியும்‌ நாங்க யோசிக்கவே இல்ல. இதை சீரமைச்சா போதும்னு நைட்டு பகலாக வேலை செய்றோம். எங்க உயிரை நெனச்சு பயந்தா எதுவும் நடக்காது" என உரத்த குரலில் பேசிவிட்டு மரக்கிளை ஒன்றை இழுத்துச் சென்றார்.

அருகில் இருந்த மற்றொரு வீரர் பேசுகையில், "நாங்க சாப்பாடு தூக்கம் எதையும் எதிர்பார்த்து இங்க வரல. பசிக்கு ஏதோ ஒரு பார்சல். படுத்துக்க ஒரு பள்ளிக்கூட சிமெனன்ட் தரை இருந்தா போதும். ஆனா, இங்க எல்லா வசதியும் செஞ்சு கொடுக்குறாங்க. நம்ம வேலையை முடிப்போம்" என்றார்.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் இமானுவேல், ``ஊட்டி - கூடலூர் சாலையில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. இதுதவிர ஊட்டி - மஞ்சூர் சாலை, ஊட்டி - எடக்காடு சாலை மற்றும் கிராப்புறங்களுக்குச் செல்லும் சாலை என மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராட்சத யூகலிப்டஸ், சீகை, குப்ரசஸ் மரங்கள் விழுந்தன. பேரிடர் மீட்புப் பணிகளுக்காக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 350-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நீலகிரி: `எங்க உயிரை நெனச்சு பயந்தா, எதுவும் நடக்காது!’ - பேரிடரை எதிர்த்து களமாடிய மீட்புக் குழு

ஒரு நாளைக்கு 40 முதல் 50 அழைப்புகள் வந்தன. விழுந்து கிடந்த எல்லா மரங்களையும்‌ வெட்டி‌ அகற்றினோம். என்னுடைய ஜீப்பிலேயே சில இயந்திரங்களை வைத்துக்கொண்டு வழியில் கிடந்த மரங்களை ஓட்டுநரும் நானுமே‌ அகற்றினோம். வீரர்கள் எந்த அசௌகரித்தையும் பார்க்காமல் உயிரைப் பணையம் வைத்து வேலை செய்தனர். ஜே.சி.பி இயந்திரங்கள் மீதும், ஏணி மீதும்‌ நின்று சீரைமைத்துக் கொடுத்தனர்‌. மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருந்தால் இது சாத்தியமானது. ஒரே வாரத்தில் சீரமைக்க முடிந்தது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு