Published:Updated:

`283 நிலச்சரிவு அபாய பகுதிகளில் 48 குழுக்கள்!' - இரண்டாம் பேரிடரை எதிர்கொள்ளத் தயாராகும் நீலகிரி

பள்ளிகள் அனைத்தும் மீட்பு மையங்களாக செயல்படும், இரவு மழை தொடர்ந்தால் நிலச்சரிவு அபாயம் மிகுந்த 67 இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள்.

red alert
red alert

நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில், 283 மழை பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டு 42 குழுக்கள் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து மீட்புப் படையினர் 100 பேர் வரவுள்ளனர். மண்சரிவை சீரமைக்க 20 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ராணுவ உதவியையும் நாட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

red alert
red alert

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கொட்டித்தீர்த்த பெருமழையிலிருந்து இன்னும் மழை தீர்ந்தபாடில்லை எனும் அளவுக்கு மழை தொடர்ந்து பெய்துவருகிறது. கடந்த 100 ஆண்டுகள் கண்டிராத பெருமழை வெள்ளத்திலிருந்து மக்கள் மெல்ல மீண்டுவரும் நீலையில், தற்போது நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. இது நீலகிரி மக்களுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் எந்தப் பின்னடைவும் இல்லாமல் கடந்த ஆகஸ்ட் மாத பேரிடரை எதிர்கொண்ட அதே திறத்துடன் களம் இயங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், நீலகிரியில் 3 நாள்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.

red alert
red alert

இதைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று மாலை அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தாழ்வான மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான மீட்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்ல அனைத்து அரசு துறை அதிகாரிகளையும் உஷார் நிலையில் இருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்புக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (22-ம் தேதி) மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

red alert
red alert

இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேசினார். ``மழையால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல ஏற்ற வகையிலும், நிவாரண மையங்களாக செயல்படுத்தவும் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

` வெள்ள பாதிப்பைவிட அரசின் செயல் வேதனையளிக்கிறது!' - 1 லிட்டர் கெரசினால் கலங்கும் நீலகிரி மக்கள்

குன்னூர் மற்றும் குந்தா பகுதிகளில் மிகவும் ஆபத்தான மற்றும் நிலச்சரிவு ஏற்படும் எனக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் 283 இடங்கள் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அதில், 67 இடங்கள் மிகவும் அபாயகரமான பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. இரவு மழை அதிகமாக பெய்தால், 67 இடங்களில் உள்ள மக்களும் நிவாரண மையங்களுக்குக் கொண்டு வரப்படுவார்கள். இதற்காக 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

red alert
red alert

இதில், நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், வருவாய் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்வார்கள். இவர்கள் சாலை மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டாலோ அல்லது மரங்கள் விழுந்தாலோ இவர்கள் அதை சீரமைப்பார்கள். அரை மணி நேரத்துக்குள் மண் சரிவு மற்றும் மரங்களை அகற்றும் வகையில் இக்குழு செயல்படும். போக்குவரத்து பாதிக்காதவாறு இவர்கள் உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள். இதுதவிர 100 தீயணைப்புத்துறையினர் மற்றும் பயிற்சி பெற்ற மீட்புக்குழுவினர் மற்ற மாவட்டங்களிலிருந்து வருகின்றனர்.

ஒரே வாரத்தில் 3000 மி.மீ மழை... நீலகிரி கனமழை நமக்கு உணர்த்துவது என்ன?

மேலும், மாநில பேரிடர் மீட்புக்குழுவினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினர் டார்ச் லைட், படகு மற்றும் மீட்புக் கயிறு போன்ற உபகரணங்களுடன் வருகின்றனர். பாதுகாப்பற்ற மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தாங்களாவே முன்வந்து நிவாரண மையங்களுக்குச் செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, விரிசல் அடைந்த வீடுகள் மற்றும் உடைந்த வீடுகளில் இருக்க வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் நாளை வெளியில் வர வேண்டாம்.

red alert
red alert

ஊட்டி - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 13 இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டிருந்தன. அவைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டது. இதனால், போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே சாலை மூடப்படவில்லை. பாதிப்பு அதிகமாக இருந்தால், குன்னூர் ராணுவ மையத்தின் உதவிகள் கேட்கப்படும். நெடுஞ்சாலைத்துறை பாதிப்புகளை சீரமைக்க 20 பொக்லைன் இயந்திரம் தயார் நிலையில் உள்ளது" என்றார்.