Published:Updated:

நிவர் புயல்: தமிழகத்தில் ரத்துசெய்யப்பட்ட 6 ரயில்கள்! - முழுப் பட்டியல்

ரயில்
ரயில் ( Representational Image )

நிவர் புயல், நாளை மறுநாள் தமிழக கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கவிருக்கிறது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சென்னையிலிருந்து செல்லும் ஆறு ரயில்கள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன.

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. சென்னையிலிருந்து 520 கிலோமீட்டர் தொலைவில் மையம்கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். நாளை தீவிரப் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயல் மாமல்லபுரம் - காரைக்காலுக்கு இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

நிவர் புயல்
நிவர் புயல்
IMD

புயல் கரையைக் கடக்கும்போது அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும், காற்று மணிக்கு 100 கி.மீ-க்கும் அதிகமாக வீசக்கூடும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் – மயிலாடுதுறை மார்க்கமாகச் செல்லும் ஆறு விரைவு ரயில்கள் இரண்டு நாள்களுக்கு ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

ரத்துசெய்யப்பட்ட ரயில்கள் - விவரம்

ரயில் ரத்து விவரம்
ரயில் ரத்து விவரம்

வண்டி எண் 06865/06866 சென்னை - தஞ்சை - சென்னை சிறப்பு ரயில் நவம்பர் 24, 25-ம் தேதிகளில் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

வண்டி எண் 06795/06796 சென்னை - திருச்சி - சென்னை சிறப்பு ரயில் நவம்பர் 25-ம் தேதியன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

வண்டி எண் 06323 மைசூர் - மயிலாடுதுறை ரயில் 24-ம் தேதி திருச்சி - மயிலாடுதுறை இடையே ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

வண்டி எண் 06188 காரைக்கால் - எர்ணாகுளம் ரயில் 24-ம் தேதி திருச்சி - காரைக்கால் இடையே ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

வண்டி எண் 02898 புவனேஸ்வர் - புதுச்சேரி ரயில் 24-ம் தேதி சென்னை - புதுச்சேரி இடையே ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

வண்டி எண் 06231 மயிலாடுதுறை - மைசூர் ரயில் 25-ம் தேதி மயிலாடுதுறை - திருச்சி இடையே ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

ரயில் எண் 06187 காரைக்கால் - எர்ணாகுளம் ரயில் 25-ம் தேதி காரைக்கால் - திருச்சி இடையே ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

வண்டி எண் 02084 கோவை - மயிலாடுதுறை ஜன் சதாப்தி சிறப்பு ரயில் 25-ம் தேதி திருச்சி - மயிலாடுதுறை இடையே ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

வண்டி எண் 02083 மயிலாடுதுறை - கோவை ஜன் சதாப்தி சிறப்பு ரயிலானது 25-ம் தேதி மயிலாடுதுறை - திருச்சி இடையே ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

வண்டி எண் 02897 புதுச்சேரி - புவனேஸ்வர் ரயில் 25-ம் தேதி புதுச்சேரி - சென்னை இடையே ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

வண்டி எண் 02868 புதுச்சேரி - ஹவுரா அதிவிரைவு ரயில் 25-ம் தேதி புதுச்சேரி - விழுப்புரம் இடையே ரத்துசெய்யப்பட்டிருக்கிறது.

ரயில்
ரயில்
Representational Image

இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு முழுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும். இ-டிக்கெட் எடுத்தவர்களுக்கு, அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். நேரில் டிக்கெட் எடுத்தவர்கள் முன்பதிவு மையத்துக்குச் சென்று டிக்கெட்டை ரத்து செய்து கட்டணத்தைத் திரும்பப் பெறலாம் என்று ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு