Published:Updated:

தமிழகத்தை நெருங்கும் புரெவி புயல் - 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

பாம்பன் பாலம் - புரெவி புயல்
பாம்பன் பாலம் - புரெவி புயல் ( உ.பாண்டி )

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல், தென்தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் இன்றிரவு அல்லது நாளை அதிகாலை பாம்பன்- கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியிருந்த புரெவி புயல் நேற்று இரவு இலங்கை திரிகோணமலையில் கரையைக் கடந்து, பாம்பனுக்குக் கிழக்கே 90 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. தற்போது மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் தென்தமிழகப் பகுதிகளை நோக்கி புரெவி புயல் நகர்ந்துகொண்டிருக்கிறது. இது, அடுத்த மூன்று மணி நேரத்தில் பாம்பனில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் பாம்பனில் கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

பாம்பன் பாலம் - புரெவி புயல்
பாம்பன் பாலம் - புரெவி புயல்
உ.பாண்டி

அந்தப் பகுதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுகிறது. நேற்று மாலை முதல் ராமேஸ்வரம் பகுதிகளில் அதி கனமழை பெய்துவருகிறது. ஊரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கிறது. புயலின் காரணமாக தனுஷ்கோடி, மண்டபம் கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன.

வலுவடையும் புரெவி புயல்... தென்மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை!

ஆறடிக்கும் அதிகமான உயரத்தில் அலைகள் வருவதால், கடலோர மக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளிலிருக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.

புரெவி புயல் காரணமாக  முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள்
புரெவி புயல் காரணமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்கள்
உ.பாண்டி

தற்போது கன்னியாகுமரியிலிருந்து 230 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கும் புயல், பாம்பனைக் கடந்து மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, தென் தமிழக கடலோர மற்றும் தென் கேரளப் பகுதிகளில் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அப்போது மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. புயலின் காரணமாக, தென்தமிழக மற்றும் தென் கேரளக் கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதி கனமழை மற்றும் பல இடங்களில் கனமழையும் பெய்துவருகிறது.

அதோடு, புயல் காரணமாக அடுத்த மூன்று மணிநேரத்தில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், திண்டுக்கல், அரியலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நாகப்பட்டினம், ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு