Published:Updated:

` பேரழிவில் நிற்கும் தேவதை!' - பீகார் வெள்ளத்தைக் காட்சிப்படுத்தும் கல்லூரி மாணவி

இது ஒன்றும் அவ்வளவு ஈஸி இல்லை. ஒரு செய்தியை வெளிக்கொண்டுவர எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பதை வந்துபாருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பீகாரில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலிருந்து வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். தலைநகர் பாட்னாவில் கடந்த வெள்ளிக்கிழழை பெய்த தொடர் மழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. பாட்னாவில் பெய்த கனமழையால் ராஜேந்திர நகரில் உள்ள துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடியின் வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் சனிக்கிழமையிலிருந்து வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்ததால் பாட்னா நகரின் தாழ்வான பகுதிகளான ராஜேந்திர நகர், பாடலிபுத்திரம் காலனி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்துள்ளது.

Aditi Singh
Aditi Singh

3 நாள்களுக்குப் பிறகு நேற்று அந்தப் பகுதிகளுக்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் சென்று துணை முதலமைச்சர் சுஷில்குமார் மோடியையும் அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டு, ரப்பர் படகின் மூலம் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். அங்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 19 குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படகுகள் மூலம் இதுவரை 26 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பீகாரில் மட்டும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 29 பேர் பலியானதாகப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சவுரப் அனுராஜ் (Saurabh Anuraj) என்பவர் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வெள்ளம் தேங்கிய பகுதிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் முயற்சி அது. `நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி(NIFT)யில் படிக்கும் அதீதி சிங் என்ற மாணவி மழை வெள்ளம் தேங்கிய சாலைகளில் ரெட் கலர் உடை அணிந்து, மாடல் போல போஸ் கொடுக்கிறார். பல்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை `பேரழிவில் தேவதை’ என்று தலைப்பில் சவுரப் அனுராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Aditi Singh
Aditi Singh

அடுத்த 24 மணி நேரத்திலே அந்த போஸ்ட் வைரலானது. இவரின் இந்த முயற்சிக்குப் பல்வேறு தரப்பினரும், பாசிட்டிவ், நெகட்டிவாக கமென்ட் செய்துவருகின்றனர். அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், ``இது ஒன்றும் அவ்வளவு ஈஸி இல்லை. ஒரு செய்தியை வெளிக்கொண்டுவர எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பதை வந்துபாருங்கள். பால்கனியில் அமர்ந்துகொண்டு, வீடியோ எடுத்துக்கொண்டு, மற்றவர்களை விமர்சனம் செய்வது ஒருபோதும் உதவப்போவதில்லை. களத்துக்கு வந்துபாருங்கள், அப்போதுதான் உண்மை நிலை புரியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோன்ற இடங்களில் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே போட்டோஷூட் நடத்தவேண்டும் என யாரும் விரும்பமாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார். `பீகார் வெள்ளத்தை’ காட்சிப்படுத்த தனித்துவமான முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். ஒருதரப்பினர் வரவேற்பு தெரிவித்த போதிலும், மற்றொரு தரப்பினர், விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டனர். நெட்டிசன் ஒருவர், ``இயற்கைப் பேரழிவை ரொமான்டிஸைஸ் செய்ய முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

Instagram post
Instagram post

தொடர் விமர்சனங்கள் காரணமாக, சவுரப் அனுராஜ் மற்றொரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். பல்வேறு கஷ்டங்களுக்கிடையே எப்படி போட்டோ ஷூட் நடந்தது என்பதை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோ அது. ``யாரும் கழிவுநீரில் நின்றுகொண்டு போஸ்கொடுக்கவேண்டும் என விரும்பமாட்டார்கள். ஒரு செய்தியை இந்த உலகத்துக்குச் சொல்ல தனித்துவமான வழி இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

It was not that easy. Jinko lg rha bs ye ek photoshoot tha wo dekh le ek message ke liye kitna krna padta hai ghar baith ke balcony se video banana aur kisi ko criticise krna kitna asan hota kabhi yahan aake dekho kya halat hota hai. Kisi ko shauk nhi hota aise jagah jake shoot krne ka jaahan nala ka pani ho khaskar ek model ke liye wahan jake pose krna. Bs yaad rakho sabka apna tarika Hota hai har cheez ko dikhane ka. Thank you @pk.ki.photography for the bts videos . . . . #patnacity #ekbihari #heypatna #patnadiaries #patnabr #travelrealindia #instagram #indiapictures #sauravanuraj #everydayindia #meowstudio #biharsehai #patnabeats #indiabeats #flood #orangealert #biharfloods #bihar #patnaindia #biharexplore #behindthescenes #bts #beforeandafter #toughtimes #prayforbihar

A post shared by Meow Studio(Saurav Anuraj) (@meowwala) on

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு