Election bannerElection banner
Published:Updated:

குடிநீர் முதல் பேட்டரி வரை... இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள தயாராவோமா? #MyVikatan

பேரிடர் மீட்பு/ Representational Image
பேரிடர் மீட்பு/ Representational Image

ஒரு பேரிடர் காலத்தில் பொதுவாக ஒரு மனிதன் குறைந்தது 72 மணி நேரத்துக்காவது தயாராக இருக்க வேண்டும். அந்த 72 மணி நேரத்தை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருந்தாலே நீங்கள் உயிர்பிழைக்க அதிகம் வாய்ப்புள்ளது என்பதுதான் இந்த 72 மணிநேர விதி.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நம் ஊரில், 'ஒரு எமர்ஜென்ஸி என்றால் என்ன செய்ய வேண்டும்' என்பது 95% மக்களுக்குத் தெரியாது என்பது உறுதி. ஏனெனில், நாம அதற்குப் பழக்கப்படவும் இல்லை, நமக்கு அதை சொல்லிக்கொடுக்கவும் இல்லை. ஒரு பேரிடர் காலத்தில் பொதுவாக ஒரு மனிதன் குறைந்தது 72 மணி நேரத்துக்காவது தயாராக இருக்க வேண்டும். அந்த 72 மணி நேரத்தை எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருந்தாலே நீங்கள் உயிர் பிழைக்க அதிகம் வாய்ப்புள்ளது என்பதுதான் இந்த 72 மணிநேர விதி.

சரி... எவையெல்லாம் கைவசம் வைத்திருக்க வேண்டும்?

 • தண்ணீர் - ஒரு நபருக்கு 5 லிட்டர் வீதம் மூன்று நாள்களுக்கு. குறைந்தது இரண்டு லிட்டர். தேவையான அளவு காலி பாட்டில்கள் இருக்க வேண்டும். ஒருவேளை இடம்பெயரும் சூழ்நிலை வந்தால் தண்ணியோடு குடத்தைத் தூக்கிக்கொண்டு செல்ல முடியாது.

 • எளிதில் கெட்டுப்போகாத உணவுப் பொருள்கள் (Dry Fruits, Nuts, Milk Powder, Milk Packets, Biscuits). உப்பு நிறைந்த உணவுப் பொருள்களைச் சாப்பிட்டால் அதிக நீரிழப்பு ஏற்படும் என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

 • முக்கியமான தொலைபேசி எண்களை மனதில் வைத்திருக்க வேண்டும். அதோடு ஒரு குறிப்பேட்டில் இதர முக்கிய விஷயங்களை எழுதி வைத்திருக்க வேண்டும்.

 • மின்சாரம் இல்லாமல் போனால் நம் செல்போன் அரை நாளிலேயே செத்துப் போய்விடும். எனவே, பவர் பேங்கை எப்போதும் முழுமையான சார்ஜ் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

 • Torchlight with Batteries.

 • Whistle - ஆபத்துக் காலத்தில் விசில் ஊதி உதவிக்கு அழைக்கலாம்.

இயற்கைப் பேரிடர்
இயற்கைப் பேரிடர்
Pixabay
 • Radio with Batteries (செய்திகள் அறிய).

 • முதலுதவிப் பெட்டி (Scissors, disinfectant, Band aid, Ointment, Sanitizer, Antibiotic Tablets, Paracetamol, Sponge, Tweezers)

 • பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள், மூலப் பத்திரம், வங்கி பாஸ் புக், ஆதார், காப்பீடு சான்றிதழ்கள் எல்லாவற்றையும் நீர்புகாத பையில் வைத்திருக்க வேண்டும். இவற்றின் அனைத்து நகல்களையும் (Copies) Ziploc பையில் போட்டு பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

 • தீப்பெட்டி மற்றும் மெழுகுவத்தி.

 • சிறிய கத்தி, ஸ்கூரு டிரைவர், Shovel, சுத்தியல், Cutting Pliers.

 • கம்பளிப் போர்வை.

 • கார் சாவி, வீட்டுச் சாவிகளை கூடுதலாக ஒன்று வைத்திருக்க வேண்டும்.

 • தேவையான அளவு கையில் பணம் (ATM மின்சாரம் இல்லாமல் செயல் இழந்துபோகலாம், இணைய சேவை துண்டிக்கப்படலாம்).

 • ஸ்பேர் பேட்டரிகள் இருந்தால் மிகவும் கைகொடுக்கும்.

  இவற்றையெல்லாம் வாங்கி வைக்க கோடி ரூபாய் தேவை இல்லை. சில ஆயிரங்களில் உங்கள் ஆபத்தை எளிதாக எதிர்கொள்ளலாம்!

- வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு