Published:Updated:

புதுச்சேரி: `மீட்புப் பணிக்கு ஹெலிகாப்டர்!’ - நிவர் புயல் ஆய்வில் களமிறங்கிய கிரண் பேடி

நிவர் புயல் | கிரண் பேடி ஆய்வு
நிவர் புயல் | கிரண் பேடி ஆய்வு

``நிவர் புயல் மூலம் புதுச்சேரிக்கு பாதிப்பு ஏற்பட்டால் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரை மீட்புப் பணிக்கு பயன்படுத்தலாம்” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி  குறிப்பிட்டிருக்கிறார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசுத் துறைகள், கிராமங்கள் என்று அடிக்கடி ஆய்வு மேற்கொண்டுவந்த கிரண் பேடி, கொரோனா தொற்றின் தீவிரம் அதிகரித்ததும் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்திருந்தார். தற்போது நிவர் புயல் புதுச்சேரியை தாக்கக்கூடும் என்ற நிலையில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் முன்னெச்சரிக்கைப் பணியில் இரண்டு நாள்களாக ஈடுபட்டுவருகின்றனர்.

நிவர் புயல் ஆய்வு
நிவர் புயல் ஆய்வு
நிவர் புயல்: `கிழக்குக் கடற்கரை சாலைக்கு சீல்’ - இருசக்கர வாகனங்கள் செல்லவும் தடை!

இந்தநிலையில், இன்று மதியம் ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்பட்ட கிரண் பேடி, காலாப்பட்டு, வைத்திக்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்தப் பகுதிகளில் இருந்த மீனவ மக்களையும், அவர்களின் படகுகளையும் பாதுகாப்பான இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர், கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்துக்குச் சென்றார். அங்கிருந்த அதிகாரிகளிடம் நிவர் புயலை எதிர்கொள்ள மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள், பேரிடர் மீட்புக்குழுவினர், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரின் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

நிவர் புயல் - புதுச்சேரி
நிவர் புயல் - புதுச்சேரி

அதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ``புதுச்சேரியில் நிவர் புயல் மீட்புப் பணிக்காக இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் சென்னை விமானப்படை மையத்தில் தயார்நிலையில் இருக்கிறது. தேவைப்பட்டால் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நகர் முழுவதும் கடைகள், மார்க்கெட் மூடப்பட்டிருக்கின்றன. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். தாழ்வான பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். பேரிடர் காலத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்வது நல்ல பலனைத் தரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு