Published:Updated:

``எதிர் வீட்டுக்காரர்கள்போல சண்டை போடுறாங்க”- முதல்வர், ஸ்டாலினை விமர்சித்த சீமான்

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

``முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் மக்களை திசைதிருப்பும் வகையில், அரசியல் போட்டியில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்'' என்றார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் குறைகளை கேட்கும்  சீமான்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் குறைகளை கேட்கும் சீமான் ( கே.அருண் )

பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழை குறைந்து, மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுவருகிறது. அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரங்களை நீட்டிவருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த சீமான்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த சீமான்

அதேசமயம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கிவருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரண்டு நாள் பயணமாக நீலகிரி மாவட்டம் வந்துள்ளார்.

ஊட்டி குருத்துக்குளி பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் அடிதுச்செல்லப்பட்ட சுசீலா, விமலா ஆகியோரது குடும்ப உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்டார்.

சீமான்
சீமான்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “மழையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிர்ப்பலி ஏற்பட்டு, குடும்பமே கலங்கிப் போயுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும். ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கால்வாய்களை ஒழுங்காகத் தூர் வாரியிருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அரசின் மெத்தனமே இதற்கு காரணம். நிலமற்ற விவசாயிகள்தான் குத்தகை எடுத்து விவசாயம் செய்கிறார்கள். அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் மக்களைத் திசைதிருப்பும் வகையில், அரசியல் போட்டியில் எதிர் வீட்டுக்காரர்கள் போல சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

சீமான்
சீமான்

அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் மாறி மாறிக் குறை கூறாமல், நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழை பாதிப்புகளைப் பொறுத்தவரை தமிழக அரசின் செயல்பாடு சரியாக இல்லை. நீர்நிலைகளின் அருகே பொதுமக்களை குடியமர்த்தக் கூடாது. ஏழைகளை வீடு கட்ட அனுமதித்துவிட்டு, பின்னர் மின்சாரம் வழங்குகிறார். இதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருந்தால் இந்த உயிரிழப்பு மற்றும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது" என்றார்.