'இந்த ஆட்சிக்கு நாள்கள் எண்ணப்படுகிறது': கி. வீரமணி பேச்சு!

இந்த ஆட்சிக்கு நாள்கள் எண்ணப்படுகிறது, அதனால்தான் அ.தி.மு.க-வினர் தலையை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்றார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

கி.வீரமணி

தமிழக அரசை எதிர்த்து திராவிடர் கழகத்தினர் தஞ்சாவூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேசிய வீரமணி, "எடப்பாடி தலைமையிலான அரசு மேகதாதுவில், அணைகட்டுவதற்கு அனுமதி அளிப்பது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வில் தமிழக அரசு தமிழக மாணவர்களை ஏமாற்றிவிட்டது. நீட் தேர்வு தொடர்பாக இதுவரை இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், அது என்ன ஆச்சுன்னே தெரியவில்லை. தமிழர்களாகிய நாம் போராடி, நம்முடைய வரிப்பணத்தில் எல்லாத்தையும் பெற்று வைத்திருக்கிறோம். மருத்துவக்கல்லூரியில் கட்டி வைத்திருக்கிறோம், ஆனால், வடநாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் வந்து படிக்கின்ற மாணவர்களுக்கான  வாய்ப்பைத்தான் மத்திய அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இப்போது நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நம்முடைய கிராமத்திலிருந்து ஒரு மாணவன் மருத்துவ படிப்பில் சேர்வது என்பது குதிரை கொம்பாகத்தான் போகும் என்ற சூழல்நிலையில்தான் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்காகத்தான் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.

இந்த ஆட்சி வேட்டியை இழந்தவன் எப்படி திண்டாடுவானோ அப்படி திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கிறது. இனிமேல் இந்த ஆட்சி நிலைக்காது. அதனால்தான் ஒவ்வொரு நாளும் எம்.எல்.ஏ-க்களின் தலையை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!