Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”மக்களின் நலனே முக்கியம்: நடவடிக்கை எடுப்பாரா ஆளுநர்?” தஞ்சையில் ஜி.கே.வாசன்!

”தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவை பரிசீலித்து விரைவில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தஞ்சையில் தனியார் நிறுவனத்தைத் திறந்து வைப்பதற்காக வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்தார்.

 ஜி.கே.வாசன்

மேலும், ஜி.கே.வாசன் கூறுகையில், “தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை அளித்துள்ளனர். அவர்கள் அந்த கோரிக்கை மனுவில் என்ன தெரிவித்துள்ளனர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஜனநாயக ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் தமிழ் மாநில காங்கிரஸின் விருப்பம். அதேபோன்று மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது தோல்வி அடைந்துள்ளது என்றுதான் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்றார்.

அடுத்ததாக, ஓ.பி.எஸ் உடனான கூட்டணி குறித்து ஜி.கே.வாசனிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ’ஓ.பி.எஸ் அணியில் கூட்டணியா இல்லை வேறு அணியுடன் கூட்டணியா என்பதுகுறித்து இப்போது கருத்து சொல்ல முடியாது. அதைப்பற்றி தேர்தல் நேரத்தில்தான் கூற முடியும்’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement