Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தியாகராஜரின் நாடக விழாவின் 100-வது காட்சி, திருவையாறில் அரங்கேற்றம்

தியாகராஜரின் வாழ்க்கை வரலாற்று நாடகம் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு, அவர் முக்தி அடைந்த தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில், 100-வது காட்சி இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், திருவையாறு இசைக்கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தியாகராஜரின்
 

உலகம் முழுக்க தியாகராஜரின் வரலாற்றைக் கொண்டுசெல்ல வேண்டும், அதை நாடகத்தின் வழியாக எடுத்துச்செல்ல வேண்டுமென்ற நோக்கத்தோடு, நாடகக் கலைஞர் பி.வி. வரதராஜன் நாடகக் குழுவின் கலைஞர்கள் இதுவரை 99 காட்சிகளை நடத்தி முடித்துள்ளனர். 98 -வது காட்சியை அவரது பிறந்த ஊரான திருவாரூரிலும், தியாகராஜரின் அபிமான ஸ்தலமான தஞ்சாவூரில் 99 -வது காட்சியையும் முடித்து, தற்போது தியாகராஜர் முக்தி அடைந்த திருவையாறில் 100 -வது காட்சியையும் நடத்தத் திட்டமிட்டு, தியாகராஜ சுவாமிகள் அறக்கட்டளை மற்றும் தியாகராஜர் பிரம்மோற்சவம் சபா சார்பில் நடத்தப்பட்டுவருகிறது.

தியாகராஜராக பி.வி.வரதராஜன் நடித்து, தியாகராஜரின் கீர்த்தனைகளைப் பாடி அரங்கேறிய காட்சி அனைவரையும் பிரமிக் வைத்தது. தியாகராஜரின் 45 கீர்த்தனைகளைப் பாடி, மேடையை அதிரவைத்தனர் வரதராஜனின் நாடகக் குழுவினர். சுமார் இரண்டு மணி நேரம் இந்நாடகத்தில் தியாகராஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் வடிவில் நாடகக் கலைஞர் நடித்தனர்.

அமெரிக்காவில் 12 காட்சிகளும், துபாய், அபுதாபி ஆகிய நாடுகள் மற்றும் இந்தியா முழுக்க உள்ள மாநிலங்களில் தியாகராஜரின் வாழ்க்கையைப் போற்றும் விதத்தில் நாடகம் அரங்கேற்றியுள்ளனர். 

100-வது காட்சி விழாவின் சிறப்பு விருந்தினராக, தியாகராஜரின் ஆராதனை அறங்காவலர் குழுத்தலைவரான ஜி.ஆர். மூப்பனார் கலந்துகொண்டு நாடகத்தைத் தொடங்கிவைத்தார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement