நாகை அருகே அறுவடைசெய்த நெல்லைக் கொட்டி விவசாயிகள் போராட்டம்! | Farmers Farmers struggle to harvest the crops

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (14/01/2019)

கடைசி தொடர்பு:23:00 (14/01/2019)

நாகை அருகே அறுவடைசெய்த நெல்லைக் கொட்டி விவசாயிகள் போராட்டம்!

நாகை அருகே, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியறுத்தி, அறுவடைசெய்த நெல்லைக் கொட்டி, விவசாயிகள்  போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

விவசாயிகள்

சம்பா சாகுபடி செய்து அறுவடை முடிந்த நிலையில், நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தால், அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்துவருகின்றனர். இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல்  நிலையங்களைத் திறக்க வலியுறுத்தி, நாகை மாவட்டம் பெருங்ககடம்பனூர் கொள்முதல் நிலையம் முன்பு, அறுவடைசெய்த நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்கக் கோரி விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், 50 நிலையங்கள் திறக்கபட்டதாக மாவட்ட நிர்வாகம் தவறான தகவல் அளித்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்டாத காரணத்தால் பாலையூர், பெருங்ககடம்பனூர், தெத்தி, புலியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 3000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடியாமல் தவித்துவருகின்றனர். இந்நிலையில் நெல்லை கொட்டி விவசாயிகள்  திடீர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.