``கஜா புயல் பாதித்த இடங்களில் தென்னை வளர்க்கத் திட்டம்” -நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு | Nagai Collector New plan to cultivate coconut in areas affected by gaja

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (15/01/2019)

கடைசி தொடர்பு:15:25 (15/01/2019)

``கஜா புயல் பாதித்த இடங்களில் தென்னை வளர்க்கத் திட்டம்” -நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Nagai Collector

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தில் தென்னை வளர்க்க புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தென்னை மரம்

 

``கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகள், மறுசாகுபடியை தொடங்கும் வகையில், வேளாண்துறை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் புதிய தென்னங் கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காகப் நாகை ஆட்சியர்புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலை 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. சாகுபடிக்குத் தேவையான தென்னங்கன்றுகள் வேளாண்துறை மூலம் வழங்கப்பட உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபர் நிலங்களில் தென்னங் கன்றுகள் நடுவதற்குத் தேர்வு செய்யப்பட்ட பணிகள், கிராமசபையில் வைத்து ஒப்புதல் பெறப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இதில் சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், சீர்மரபினர், இதர வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள், பெண் தலைமையிலான குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தேர்வு செய்யப்படுபவர்களிடம் 100 நாள் வேலை அட்டை இருக்க வேண்டும். இல்லையெனில் புதிய வேலை அட்டை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் விவசாயிகளின் நிலத்திற்குரிய சர்வே எண், பரப்பளவு, தென்னங்கன்றுகளின்  எண்ணிக்கை போன்ற விவரங்கள் வேளாண்மை துறையினரால் வழங்கப்படும். 100  நாள் வேலை அட்டை வைத்திருந்தால் அவரே இந்த வேலை முடியும் வரை பணிதள பொறுப்பாளராக  பணியாற்றலாம். எனவே புயலால் பாதிப்புக்குள்ளான தென்னை சாகுபடி விவசாயிகள், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அல்லது வேளாண்மை துறை அலுவலரைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்" என மாவட்ட ஆட்சித்தலைவர் சுரேஷ்குமார்  தெரிவித்துள்ளார்.