‘அதிவேக இன்ஜின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள் | Speed Engine banned nets - Violations in the harbour

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (17/02/2019)

கடைசி தொடர்பு:07:10 (18/02/2019)

‘அதிவேக இன்ஜின்; பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் விதிமீறல்கள்’ - நஷ்டமாகும் மீனவர்கள்

Fishing Nets

சீர்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் அதிவேக இன்ஜின் பொறுத்தப்பட்ட விசைப்படகு மற்றும் சுருக்கு மடி வலை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டுமென  கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது

 

Fishing Nets

.

நாகை மாவட்டம், சீர்காழி அருகே பழையாறு கிராமத்தில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்தத் துறைமுகம் மாவட்டத்திலேயே இரண்டாவது சிறந்த துறைமுகமாக இருந்து வருகிறது. இங்கிருந்து தினந்தோறும் 350 விசைப்படகுகள் 300 பைபர் படகுகள் மற்றும் 300 நாட்டுப்படகுகள் மூலம்  சுமார் 5,000 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். அரசால் அனுமதியளிக்கப்பட்ட குறைந்தபட்ச குதிரைத்திறன் கொண்ட இன்ஜின்கள் பொறுத்தப்பட்ட 350 விசைப்படகுகள் மட்டும் இங்கு வழக்கம் போல் தினமும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அதிக குதிரைத்திறன் கொண்ட விசைப்படகுகள் பயன்படுத்த அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும் தடையை மீறி தொடர்ந்து அதிவேக இன்ஜின் பொறுத்தப்பட்டுள்ள 30 படகுகளும், தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி  வலைகளையும் இந்த அதிவேக இன்ஜின் விசைப்படகின் மூலம் பயன்படுத்தி பழையாறு துறைமுகத்திலிருந்து கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இது குறித்து பழையாறு விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அருள்செழியனிடம்  பேசியபோது, "அதிவேக இன்ஜின் பொறுத்தப்பட்டுள்ள விசைப்படகின் விலை ரூ 1 கோடியாகும், அதில் பயன்படுத்தப்படும் சுருக்கு மடி வலைகளின் மதிப்பு ரூ 60 லட்சம் வரையில் உள்ளது. இத்தகைய விசைப்படகுகளை அதிக பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வாங்கி பயன்படுத்த முடியும். ஆனால் சாதாரண விசைப்படகுகளை நடுத்தர நிலையில் உள்ளவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிவேக இன்ஜின் பொறுத்தப்பட்ட படகுகளை பயன்படுத்துவதும், சுருக்கு வலைகளைப் பயன்படுத்துவதும் குற்றமாகும். இதற்கு அரசு தடை செய்துள்ளது. ஆனால் தடையை மீறி சிலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு மீன் வளத்துறை அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்து வருகின்றனர். அதிவேக இன்ஜின் படகுகளில் சுருக்கு மடி வலைகளை  பயன்படுத்துவதால் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை  அள்ளி கடல் வளத்தையே  கபளீகரம் செய்து விடுகின்றன. இதனால் சாதாரண விசைப்படகின் மூலம் செல்பவர்களுக்கு மிகக் குறைந்த அளவே மீன்களே கிடைப்பதால், மீனவர்கள் நஷ்டம் அடைகின்றனர்.எனவே அதிவேக இன்ஜின் விசைப்படகுகள் மற்றும் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்துவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் "என்றார். 

 


[X] Close

[X] Close