சிதம்பரத்தில் கோலாகலமாகத் தொடங்கிய நாட்டியாஞ்சலி விழா! | Chidambaram Natiyanjali function started

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (01/03/2019)

கடைசி தொடர்பு:11:45 (01/03/2019)

சிதம்பரத்தில் கோலாகலமாகத் தொடங்கிய நாட்டியாஞ்சலி விழா!

சிதம்பரத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா நேற்று இரவு தொடங்கியது. 

  நாட்டியாஞ்சலி

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் மத்திய அரசின் பண்பாட்டுத் துறை, டில்லி சங்கீத நாடக அகாடமி, தென்னிந்திய கலாசார மையம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் ஆகியவை இணைந்து 38 -வது நாட்டியாஞ்சலி விழா தெற்கு வீதியில் உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வளாகத்தில் நேற்று இரவு மங்கள இசையுடன் தொடங்கியது. அறக்கட்டளை தலைவர் டாக்டர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் வழக்கறிஞர் சம்பந்தம் வரவேற்றார். என்எல்சி இந்தியா சேர்மன் ராகேஷ்குமார் தொடங்கிவைத்தார்.

நாட்டியாஞ்சலி

முதல் நிகழ்சியாக பெங்களூரூ ஸ்கத்த நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா சித்தேந்திரா குஞ்சுப்புடி கலை மையம், மலேசிய நிருத்திய கலாஞ்சலி நாட்டிய மையம் உட்பட பல்வேறு நாட்டிய நிகழ்சிகள் நடைபெற்றன. மேலும், நாட்டியாஞ்சலி விழா 4 -ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close