நாகை அருகே சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்து சிரெஞ்சு - சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை | Needle changed as danger for children

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (01/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (01/03/2019)

நாகை அருகே சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்து சிரெஞ்சு - சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை

சீர்காழி சுற்றுவட்டாரப்  பகுதிகளில் மருத்துவர்கள் ஊசிபோட பயன்படுத்தும் சிரெஞ்சில் இனிப்பு விற்பனை செய்வதை ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, 

doctor

நாகை மாவட்டம்  சீர்காழி மற்றும் கொள்ளிடம், ஆச்சாள்புரம் பகுதிகளில் உள்ள  பெட்டிக் கடைகளில் மருத்துவர்கள் ஊசி போடப் பயன்படுத்தும் சிரெஞ்சில் இனிப்பு சுவையுள்ள திரவத்தை அடைத்து அதன் நுனிப்பகுதியில் ஒரு சிறு குப்பியால் மூடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதைப்  பள்ளி மாணவர்களும் குழந்தைகளும் வாங்கியவுடன் சிரெஞ்சின் (பீச்சாங்குழல் ) நுனிப்பகுதியில் உள்ள குப்பியை நீக்கிவிட்டு வாயில் அப்படியே அந்த இனிப்பு திரவத்தை செலுத்தி சுவைத்து சாப்பிட்டு வருகின்றனர். இந்த சிரெஞ்சு இனிப்பு திரவத்துடன் ஒன்றின் விலை  ரூ.5 வீதம் விற்கப்படுகிறது. 

இதைப் பள்ளிச் சிறுவர்கள் அதிகம் வாங்கிப் பருகி வருகின்றனர். இனிப்புச் சுவையுள்ள திரவப் பொருள்கள் எத்தனையோ விதத்தில் விற்பனை செய்யப்பட்டாலும், இந்த  புதிய முறையிலான இனிப்பை சிரெஞ்சுடன் சிறுவர்களும் குழந்தைகளும் ஆவலுடன் வாங்கி பருகிவிட்டு, பின்னர் இந்த சிரெஞ்சை விளையாட்டுப் பொருளாகவும்  பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவர்கள் பயன்படுத்தும் சிரெஞ்சின் விலையே ரூ.5-க்கு விற்கப்படுவதால் அதில் இனிப்பு நிரப்பி மூடி போட்டு அதே விலைக்கு விற்க சாத்தியமில்லை. இந்த சிரெஞ்சுகள்  மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டவையாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. எனவே கொள்ளிடம் மற்றும் ஆச்சாள்புரம் பகுதியில் சிரெஞ்சுடன் விற்பனை செய்யப்படும் திரவத்தை சுகாதாரத் துறை சார்பில்  அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


[X] Close

[X] Close