மஹா சிவராத்திரி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா! | Chidambaram Natiyanchali function

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (05/03/2019)

கடைசி தொடர்பு:11:18 (05/03/2019)

மஹா சிவராத்திரி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா!

சிதம்பரம் நடராஜர் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆடல் வல்லான் நடராஜருக்கு நடனக் கலைஞர்கள் தங்கள் நாட்டிய அஞ்சலியைச் செலுத்தும் வகையில், நாட்டியாஞ்சலி விழா நேற்று தொடங்கியது.  நாட்டியாஞ்சலி விழா கோயிலில் கீழக் கோபுர வாயில் அருகே நடந்தது. விழாவிற்கு, கிருஷ்ணமூர்த்தி தீட்சிதர் தலைமைதாங்கினார்.  புகழ்பெற்ற  பரதநாட்டியக் கலைஞர் பத்மாசுப்ரமணியன் விழாவைத் தொடங்கிவைத்தார்.

நாட்டியப்பள்ளி மாணவி

இதில், சென்னை கலா அகாடமி, சென்னை சரண்யா திருத்தியா வித்யாலயா ஆகிய நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் நடந்தது. முன்னதாக, பிரபல நாட்டியக் கலைஞர் பத்மாசுப்பிரமணியன், நந்தனாரின் வரலாற்று நிகழ்ச்சியைப் பரதநாட்டியம் மூலம் தத்ரூபமாக வெளிப்படுத்தினார்.

பத்மாசுப்ரமணியன்

இதை ஏராளமான பரதநாட்டியக் கலைஞர்கள் கண்டுகளித்தனர். இதேபோல, சிதம்பரம் தெற்குக் கோபுர வாயில் அருகில் உள்ள தனியார் அறக்கட்டளை இடத்தில், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடந்துவந்த நாட்டியாஞ்சலி விழாவும் நேற்று நிறைவு பெற்றது. 


[X] Close

[X] Close