`சிதம்பரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது!' - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸூக்கு உற்சாக வரவேற்பு | chidambaram People Welcomes Bhubaneswar express

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (10/03/2019)

கடைசி தொடர்பு:07:50 (10/03/2019)

`சிதம்பரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது!' - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸூக்கு உற்சாக வரவேற்பு

சென்னை தாம்பரம் - நாகர்கோயில் இடையேயான ஏழைகளின் ரயிலான அந்தியோதயா விரைவு ரயில், வாராந்திர ரயிலான புவனேஸ்வர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்கள் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது. சிதம்பரத்தில் உலக புகழ் பெற்ற நடராஜர் கோயில், பழைமை வாய்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் அருகே  சதுப்புநிலக்காடுகள் உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம், புவனகிரி ராகவேந்தர் கோயில், பரங்கிப்பேட்டை பாபாஜி கோவில் ஆகியவை உள்ளன. 

சுற்றுலாப் பயணிகள் மற்றும் சிதம்பரம் நகரப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இந்த இரு ரயில்களும் சிதம்பரம் 
ரயில் நிலையத்தில்  நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட நாட்களாகக் கோரி வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு 
முன்பு சிதம்பரம்  வர்த்தகர் சங்கம் சார்பில் ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. 
பின்னர் அதிகாரிகள்  பேச்சு வார்த்தை நடத்தியதால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. 

சிதம்பரம்

இந்நிலையில்  சிதம்பரம் நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அந்தியோதயா, புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
நேற்று (9-ம்தேதி) முதல் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பால்
சிதம்பரம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரயிலுக்குச் சிதம்பரம் எம்.பி சந்திரகாசி மற்றும் வர்த்தகர் சங்கம் நிர்வாகிகள், பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி ரயிலை மக்கள் வரவேற்றனர். சிதம்பரம் வாத்தகர் சங்க தலைவர் சதீஷ்குமார், செயலாளர் முருகப்பன், பொருளாளர் முரளிதரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 


[X] Close

[X] Close