சுவிதா செயலி எப்படி? - அரசியல் கட்சிகளுக்கு விளக்கிய கடலூர் ஆட்சியர்! | All Party Meeting in Cuddalore for facing election 2019

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (17/03/2019)

கடைசி தொடர்பு:06:30 (17/03/2019)

சுவிதா செயலி எப்படி? - அரசியல் கட்சிகளுக்கு விளக்கிய கடலூர் ஆட்சியர்!

கடலூரில், நாடாளுமன்றத் தேர்தல்குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கடலூர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், நாடாளுமன்றத் தேர்தல்-2019 குறித்து அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான அன்புச்செல்வன் தலைமையில் நடந்தது. அப்போது அவர், "வரும் நாடாளுமன்றத் தேர்தல் கடலூர் மாவட்டத்தில் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெற, மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. தேர்தல் ஆணையம் ' சுவிதா' என்ற செல்பேசி செயலியைப் புதிதாக அறிமுகம்செய்துள்ளது. இந்த சுவிதா என்ற செயலியைப் பயன்படுத்தி பிரசாரம் செய்வதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் இரண்டு நாள்களுக்கு முன்பாகப் பதிவிட்டு அனுமதி பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவித்தார். 

கடலூர்

 இக்கூட்டத்தில், புதியதாக அறிமுகம்செய்யப்பட்ட சுவிதா என்ற செல்பேசி செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் விளக்கப்படம் காண்பிக்கப்பட்டது. மேலும், தேர்தல் தொடர்பான செலவு  கணக்குகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விநாயகம், தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


[X] Close

[X] Close