அரிய வகை கடல் உயிரினங்களை கடத்திய 3 பேர் கைது | ramanathapuram, Rare, sea, Species, Hijack, Wild, officer, arrest

வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (28/05/2013)

கடைசி தொடர்பு:14:13 (28/05/2013)

அரிய வகை கடல் உயிரினங்களை கடத்திய 3 பேர் கைது

மதுரை: ராமநாதபுரத்தில் இருந்து அரிய கடல் உயிரினங்களை கடத்தி வந்த 3 பேரை மதுரையில் வனத் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் கடல்பசு, கடற்குதிரை, கடல் அட்டைகள், பவளப் பாறைகள் உள்பட பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்காக மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரினக் காப்பகம் ஒன்றை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
 

ஆனாலும், மீனவர்கள் என்ற போர்வையில் இந்த அரிய வகை உயினங்களையும் கடல் பொருட்களையும் கொள்ளையடிக்கும் கும்பல் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் இருக்கின்றன. இந்நிலையில், ஒரு கும்பல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பவளப்பாறை, கடல் முள்ளி, அரிய வகை சங்குகள், கடல் குதிரை போன்றவற்றை கடத்திக் கொண்டு வந்திருப்பதாக மதுரை வனத்துறை அலுவலகத்திற்குத் தகவல் கிடைத்தது. வன அதிகாரி மாரிமு-த்து உள்ளிட்ட வனத்துறையினர் கடல் உயிரினங்களை கடத்தி வருபவர்கலை பிடிக்க விரைந்து சென்றனர்.

அப்போது, வைகை ஆற்றுப்பாலம் அருகே கடல் பொருட்களைக் கொட்டி, தரம் பிரித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முக்கூரான், குமார், மாரிச்சாமி ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பவளப்பாறை, கடல் முள்ளி, கடல் குதிரை போன்றவை மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை வெளிநாட்டுக்குக் கடத்த அந்தக் கும்பல் திட்டமிட்டிருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, வன உயிரினங்களை வேட்டையாடுவது மட்டும் குற்றமல்ல, அவற்றின் உடலில் இருந்து பெறப்பட்ட பொருட்களை வைத்திருப்பதும் குற்றம் தான்.  பவளப்பாறை என்பது ஒரு பிராணி இல்லை என்றாலும், அது லட்சக்கணக்கான நுண்ணுயிர்கள் சேர்ந்து ஏற்படுத்தும் இயற்கை அரண். அதை கொள்ளையடிப்பது குற்றம் என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர்.


கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close