பண்ருட்டி அருகே இருதரப்பினர் மோதல் - 25 பேர் மீது வழக்குப்பதிவு! | Clash between two gang near Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (05/05/2019)

கடைசி தொடர்பு:15:15 (05/05/2019)

பண்ருட்டி அருகே இருதரப்பினர் மோதல் - 25 பேர் மீது வழக்குப்பதிவு!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கே.குச்சிபாளையம் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுவர்கள் கை பந்து விளையாடியுள்ளனர். அப்போது மேல்வரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லெனின் உட்படப் 4 பேர், இங்கு விளையாடக் கூடாது எனக் கூறியுள்ளனர். சிறுவர்களிடம் பிரச்னை செய்வதை அறிந்த அப்பகுதி மக்கள் லெனின் உள்ளிட்டவர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குச்சிபாளையம்

இது குறித்து தகவலறிந்த மேல்கவரப்பட்டை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளில் குச்சிப்பாளையம்  வந்து அங்குள்ள வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் குச்சிப்பாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரன், ரகுபதி, தயாளன், செல்லம்மாள், ராயர் ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.  3 வீடுகளும்,  2 மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளது. இதேபோல் குச்சிப்பாளையம் கிராம மக்கள் தாக்கியதில் மேல்கவரப்பட்டை சேர்ந்த திவாகர், தர்மராஜ், செல்வி ஆகிய 3 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும்  பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குச்சிபாளையம்

இது குறித்து குச்சிப்பாளையத்தை சேர்ந்த தயாளன் கொடுத்த புகாரின் பேரில் மேல்கவரப்பட்டை சேர்ந்த திவான், தர்மராஜ், திவாகர், சீத்தாராமன், தவசி, லெனின் உட்பட 15 பேர் மீது கொலை முயற்சி, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல் உட்பட பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்தனர்.  தர்மராஜ்(45) என்வரை கைது செய்துள்ளனர். மேல்கவரப்பட்டை சேர்ந்த தர்மராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குச்சிப்பாளையத்தை சேர்ந்த ரகுபதி, பன்னீர், சந்தோஷ், வடிவேல், அன்பு, தங்கராசு உட்படப் 10 பேர் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை, எஸ்.சி.எஸ்.டி., சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தயாளன்(30)என்பவரைக் கைது செய்துள்ளனர்.

வழக்குப் பதிவு செய்து 2 பேரை கைது செய்துள்ளனர். மோதலுக்குக் காரணம் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முன்விரோதம் என்று போலீஸ் தரப்பில்கூறப்படுகிறது. இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.