காஞ்சிபுரம் அருகே, முன்விரோம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்த ஒருவர் முன்விரோம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவர் தி.மு.க. ஒன்றிய செயலாளராகவும், கட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவராகவும் இருந்தார். இவருக்கும், அப்போதைய அ.தி.மு.க.வை சேர்ந்த வேலு என்பவருக்கும் முன் பகை இருந்து வந்தது.

இந்நிலையில் முனுசாமி 2009ஆம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்குள் அவரது ஒரு தம்பி ராமுவும் கொலை செய்யப்பட்டார்.

முனிராஜ், ராமு கொலையால், 2011ல் அ.தி.மு.க.வை சேர்ந்த வேலு என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனால் வேலு தரப்பைச் சேர்ந்த ஆட்கள் ராமுவை கொலை செய்திருக்கலாம் என கருதப்பட்டது.

இந்நிலையில் முனிசாமியின் இன்னொரு தம்பி குமார், நேற்று இரவு 8.45 மணியளவில் சிங்கபெருமாள் கோயில் பேருந்த நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் திடீரென குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டனர். வெட்டப்பட்ட குமார், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

முன்விரோதம் காரணமாக வேலு தரப்பினர் குமாரை கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தால் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!