முடிவு பெறாத கட்டடப்பணி! - விருத்தாசலம் அருகே கோயிலில் செயல்படும் தொடக்கப்பள்ளி | Cuddalore Govt School News

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (03/06/2019)

கடைசி தொடர்பு:18:40 (03/06/2019)

முடிவு பெறாத கட்டடப்பணி! - விருத்தாசலம் அருகே கோயிலில் செயல்படும் தொடக்கப்பள்ளி

விருத்தாசலம் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருவதால், அருகில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 

நந்திமங்கலம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது நந்திமங்கலம் கிராமம். இந்தக் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளி கட்டடம் இடிந்து மிக மோசமான நிலையில் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. எனவே, இடித்துவிட்டு வேறு  புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனக் கிராம மக்கள்  அரசுக்குக் கோரிக்கை மனுக் கொடுத்துள்ளனர். இதையடுத்து அரசு ரூ 10 லட்சம் நிதி ஒதுக்கி புதிய கட்டடம் கட்ட உத்தரவிட்டது. கடந்த ஆண்டு முதல் பள்ளியின் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.  கட்டடப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை. 

நந்திமங்கலம் தொடக்கப்பள்ளி

இந்த நிலையில், இன்று பள்ளி திறக்கப்பட்டது. பள்ளிக் கட்டடப்பணி முடிவடையாததால் மாணவ, மாணவிகளை அருகில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் அமர்த்தப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. அரசுத் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தற்காலிகமாக அரசு மாற்று ஏற்பாடாக வேறு கட்டடம் ஏற்பாடு செய்யாமல் கோயில் வளாகத்தில் அமர்ந்து படித்து வருகின்றனர். இதைப்பற்றி கல்வித்துறை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.