பட்டப்பகலில் ஊழியரைக் கட்டிப்போட்டு அடகுக்கடையில் கொள்ளை

மதுரை: மதுரையில் பட்டப்பகலில் ஊழியரைக் கட்டிப்போட்டுவிட்டு அடகுக்கடையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை, பழங்காநத்தம், ஜெயம் தியேட்டர் பின்புறம் 'ஹரிஹரன் ஃபைனான்ஸ்' என்ற பெயரில் நகை அடகுக்கடை உள்ளது. இங்கு சோழவந்தானைச் சேர்ந்த துரைப்பாண்டியன் என்பவர் கேஷியராக இருக்கிறார். இன்று (20ஆம் தேதி) காலையில் இவர் மட்டும் பணியில் இருந்திருக்கிறார்.

அப்போது இரண்டு வாலிபர்கள் கடைக்கு வந்தனர். திடீரென அவர்கள்,

துரைப்பாண்டியனின் கை, கால்களைக் கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த நகைகளை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். சத்தம் போட முயன்ற துரைப்பாண்டியனுக்கு கத்திக்குத்து விழுந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த  போலீஸார், ரத்த வெள்ளத்தில் கிடந்த துரைப்பாண்டியனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, கைரேகைகளை பதிவு செய்தனர். விசாரணையில் சுமார் 50 லட்சம் மதிப்புள்ள, 200 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்துள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-கே.கே.மகேஷ்

படங்கள்: பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!