வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (28/06/2013)

கடைசி தொடர்பு:15:41 (28/06/2013)

அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 45 பேர் படுகாயம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் உட்பட 45 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு பேருந்து ஒன்று இன்று காலை பள்ளி மாணவர்கள் 15 பேர் உட்பட 30 பயணிகளுடன் களப்பாலில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆத்தூர் என்ற கிராமத்தில் குறுகலான சாலையில் பேருந்து வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் காயம் ஏற்பட, அவர்களை சாலையில் சென்றவர்களும் அந்த கிராமத்தினரும் உடனடியாக மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து 10 பயணிகளை மட்டும் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி இருக்கிறார்கள்.

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நடராஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்திருக்கிறார். அப்போது, மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக கூறி ஆட்சியரின் வாகனத்தை கிராம மக்கள் மறித்திருக்கிறார்கள். கிராம மக்களை சமாதானப்படுத்திய ஆட்சியர், மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

செய்தி, படம்: வீ.மாணிக்கவாசகம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்