பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்த சிறுமி

பழனி: பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 வயது பெண் குழந்தை தலையில் பலத்த காயங்களுடன் அனாதையாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று மதியம் 3 வயது பெண் குழந்தை ஒன்று அனாதையாக தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்கள் இதனை பார்த்து பணியில் இருந்த மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்திருக்கின்றனர். ஆபத்தான நிலையில் இருந்த அந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள்.


இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார், யார் அந்த சிறுமி, அவளது பெற்றோர் யார்? காயம் எப்படி ஏற்பட்டது என்று விசாரித்து வருகின்றனர். மேலும், ஏதேனும் வாகன மோதிவிட்டு, போலீஸ் விசாரணைக்கு பயந்து அச்சிறுமியை அரசு மருத்துவமனையில் யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!