லோக் ஆயுக்தாவை விரைந்து அமைத்திட எஸ்.டி.பி.ஐ. தீர்மானம்!

சென்னை: லோக் ஆயுக்தாவை விரைந்து அமைத்திட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமையில் இன்று சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது, நிஜாம் முஹைதீன், பொருளாளர் ஏ.அம்ஜத் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் எஸ்.எம்.ரபீக் அகமது அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாநில செயலாளர்கள் செய்யது அலி, அமீர் ஹம்சா, அப்துல் சத்தார், ரத்தினம், அபுதாகிர் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொணடனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரசியல் சூழல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன்பின், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்றும், இல்லையேல் ஏற்கனவே திட்டமிட்டபடி 10 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்திட வேண்டும். லோக்பால் மசோதாவுக்கு வரவேற்பு, லோக் ஆயுக்தாவை மாநில அரசு விரைந்து அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தூதரக பெண் அதிகாரி தேவயானி கோப்ராகடேவை அவமானப்படுத்திய அமெரிக்காவின் செயலுக்கு வன்மையான கண்டனம்.

தமிழக மக்களால் தொடந்து புறக்கணிக்கப்பட்டு வரும் பா.ஜ.க.வோடு மற்ற கட்சிகளை கூட்டணி அமைக்க தரகு வேலைகளில் ஈடுபடுபவர்களை கண்டிப்பது. ‘ஒருபால் உறவு‘ சம்பந்தமாக உச்ச நீதின்மன்ற தீர்ப்பை வரவேற்பது. கலாச்சார சீர்கேட்டை அதிகரித்திடும் வகையில் செயல்படும் மத்திய அரசை கண்டிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!