வெளியிடப்பட்ட நேரம்: 20:58 (28/04/2014)

கடைசி தொடர்பு:20:58 (28/04/2014)

தாமிரபரணி கரையிலுள்ள செங்கல் சூளைகளை அகற்றும் பணியை முடுக்கிவிட எஸ்.டி.பி.ஐ. முடிவு!

நெல்லை: தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைக்கப்படடுள்ள செங்கல் சூளைகளை அகற்றும் பணியை முடுக்கி விடுவதென எஸ்.டி.பி.ஐ. கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நெல்லை மாவட்டம், மேலப்பாளையம், நெல்லை திருமண மஹாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பிஸ்மி காஜா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பண நாயகத்தையும் தாண்டி தங்கள் வாக்குரிமையை பதிவு செய்த வாக்காளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வது, பொதிகை மலையில் தேயிலை தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குத்தகையை வனத்துறை வாபஸ் பெற வேண்டும்.

மேலும், தாமிரபரணி ஆற்றங்கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள செங்கல் சூளைகளை அப்புறப்படுத்தும் பணிகளை முடுக்கி விடுவதென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்