ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல்!

சேலம்: சேலத்தில் கொலை செய்யப்பட்ட பாரதிய ஜனதா பிரமுகர் ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதையடுத்து, மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில ‌பொதுச்செயலாளராக இருந்த ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் பக்ருதீன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே, ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு மக்களவை தேர்தலுக்கு பின்னர் விலக்கி கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஆடிட்டர் ரமேஷ் குடும்பத்தினருக்கு சூரமங்கலம் பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில், ரமேஷ் குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாகவும், பாரதிய ஜனதாவை வளரவிடக் கூடாது என்றும் எழுதப்பட்டிருந்தது.

இந்த மிரட்டல் கடிதம் குறித்து ரமேஷின் சகோதரர் சேஷாத்ரி சேலம் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ரமேஷின் குடும்பத்தினருக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!