வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (22/05/2014)

கடைசி தொடர்பு:15:30 (22/05/2014)

ராஜபக்சேக்கு அழைப்பை எதிர்த்து மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம்!

சென்னை: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வரும் 25ஆம் தேதி மே 17 இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், ராஜபக்சேவை  மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வரும் 25ஆம் தேதி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு மே 17 இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

"ராஜபக்சவினை அழைக்காதே... இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காதே!"  எனும் முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்திய அரசுக்கு நம் எதிர்ப்பினை பதிவு செய்ய அழைக்கிறோம். அனைவரும் திரளுவோம் என்றும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்