வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (30/05/2014)

கடைசி தொடர்பு:16:45 (30/05/2014)

விழுப்புரம் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: சிறுவன் உள்பட 2 பேர் பலி (படங்கள்)

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

பொய்யப்பாக்கத்தில் பாஸ்கரன் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் கோயிலுக்கு வாணவேடிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மதியம் 6 தொழிலாளர்கள் பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மருந்துகளில் ஏற்பட்ட உராய்வில் பட்டாசுகள் வெடித்து சிதறியது.

இதில், பாபு (45), சிறுவன் செல்வராஜ் (7) ஆகியோர் உடல் கருகி பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- நந்தகுமார்

படங்கள்: தே.சிலம்பரசன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க