திட்டை குரு பகவானுக்கு லட்சார்ச்சனை- ஹோமங்கள்!

தஞ்சாவூரில் உள்ள திட்டை திருத்தலத்தில் குருப்பெயர்ச்சியையொட்டி ராஜகுரு பகவானுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
 

தஞ்சாவூரில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவி்ல் உள்ளது தென்குடித் திட்டை எனப்படும் திட்டை திருத்தலம். ராஜகுரு பகவான் தனிச்சந்நிதியில் கோலோச்சும் இந்தத் தலத்து சிவனாரின் நாமம்- ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்.

இந்த ஆலயத்தில் குருப்பெயர்ச்சி அன்று (13.6.14) ராஜகுரு பகவானுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து நேற்று காலையில் துவங்கி மதியம் வரை சிறப்பு பரிகார ஹோமங்களும் லட்சார்ச்சனையும் நடைபெற்றன.

குருப்பெயர்ச்சியையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திட்டை தலத்துக்கு வந்து, லட்சார்ச்சனையில் கலந்து கொண்டு குருபகவானைத் தரிசித்தனர். அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் வழங்கப்பட்டன.

செய்தி, படம்: கே.குணசீலன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!