கலை நிகழ்ச்சிகளோடு நடந்த குற்றாலம் சாரல் விழா!

நெல்லை: பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றுவந்த குற்றாலம் சாரல் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஒன்பது அருவிகள், பூங்காக்கள், கண்ணைக் கவரும் இயற்கைக் காட்சிகள் என எண்ணிலடங்கா விஷயங்கள் இருக்கின்றன. மேலும், இங்குள்ள மூலைகை நீரில் எவ்வளவு நேரம் நனைந்தாலும் ஜலதோஷம் பிடிக்காது என்பது அதன் தனித்துவம். இதுதவிர, பல வழிபாட்டுத்தலங்களும் குற்றாலத்தில் உள்ளது. எனவே சீசன் நேரங்களில் அங்கு கூடம் அலைமோதுவது வழக்கம்.

அவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயனிகளை மேலும் குஷிப்படுத்த திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இணைந்து வருடந்தோறும் 'சாரல் திருவிழா' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இந்த விழா கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. இதில் இசை, நாடகம், நடனம் மற்றும் மேஜிக் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், கோலப்போட்டி, நீச்சல் போட்டி, ஆணழகன் போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, தென்னக கலைத்துறை, கலைபண்பாட்டுத் துறை மற்றும் தமிழக இயல் இசை நாடக மன்றம் இணைந்து செய்திருந்தன.

ரம்மியமான மலைப்பகுதிகளின் நடுவில் சுற்றுலா பயணிகளுக்கு குதூகலமான அனுபவமாக அமைந்த இந்த 'சாரல் திருவிழா இன்று (2ஆம் தேதி) முடிவடைகிறது.

செய்தி, படங்கள்: எஸ்.தினேஷ் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!