திருவள்ளூர் அருகே ரசாயன ஆலையில் தீ விபத்து: ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்! | Fire at chemical plant near Tiruvallur: killed 1; 2 injured

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (24/08/2014)

கடைசி தொடர்பு:13:44 (24/08/2014)

திருவள்ளூர் அருகே ரசாயன ஆலையில் தீ விபத்து: ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்!

சென்னை: திருவள்ளூர் அருகே ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூரை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் மாத்திரைகளுக்கான மூலப் பொருட்கள் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில், பணியில் இருந்து புட்லூரை சேர்ந்த ராஜேந்திரன் (35) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த 2 பேர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீ விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்புப் படை வீரர்கள் போராடி  தீயை அணைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்