'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் சுத்தப்படுத்தப்பட்ட தெப்பக்குளம்!

மதுரை: பிரதமரின் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தை பா.ஜ.க. மகளிரணியினர் சுத்தம் செய்தனர்.

பிரதமர் மோடி அறிவித்த 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் நாட்டில் பல இடங்களிலும் பிரபலங்களுடன், பொதுமக்களும் இணைந்து துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த அடிப்படையில் மதுரையில் பிரபலமான மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தை பா.ஜ.க.வின் மகளிர் அணியினர் பெரும் திரளாக வந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த தெப்பகுளத்தை சுற்றி மலை போல் தேங்கிக்கிடந்த குப்பைகளை பெண்கள் திரண்டு வந்து சுத்தப்படுத்தியதை பார்த்து, அந்த பகுதி பொதுமக்களும் இணைந்து சுத்தப்படுத்தியதை அனைவரும் பாராட்டினார்கள்.

இந்த ஏற்பாட்டை பா.ஜ.க.வின் மாநில மகளிரணி துணைத்தலைவர் மகாலட்சுமி செய்திருந்தார். தெருவை பெருக்குவது, சாலையை பெருக்குவது என்று இல்லாமல் கண்டுகொள்ளப்படாமல் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுத்தம் செய்யப்போவதாக இவர் தெரிவித்தார்.

செ.சல்மான்

படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!