கிராம மக்கள் சுய தொழில் துவங்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா கொட்டாம்பட்டி கம்பூர் கிராமத்தில் அரசு சார்பில் கிராம மக்கள் சுய தொழில் துவங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கிராமப்புறங்களில் மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. இருப்பினும் கிராம மக்கள் அனைவருக்கும் இது வருவாயை பெருக்கும் வகையில் செயல்படுத்தப்படவில்லை. கிட்டதட்ட 60 சதவீதம் பேர் வேலையின்றி இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.

இந்த 60 சதவீதம்  மக்கள் வேலைவாய்ப்பு பெற அரசு உதவியுடன் பண்ணை குட்டை அமைப்பு, கோழிப்பண்னை அமைத்தல், ஆடு, மாடு, வளர்ப்பு மீன், பண்னை வளர்ப்பு போன்ற தொழில்களை மேற்கொண்டு சுய தொழில் மூலம் வருவாய்ப் பெறுவதற்கான விழிப்புணர்வு  ஏற்படுத்தும் நோக்கில் கொட்டாம்பட்டி மற்றும் சுற்று பகுதிகளின் வரை படம் வரையபட்டது.

இதில் கொட்டாம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

-மீ.நிவேதன்


படம்: சே.சின்னத்துரை

( மாணவப் பத்திரிக்கையாளர்கள்)
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!