நில அபகரிப்பு வழக்கில் வன்னியர் சங்க மாநில துணைபொதுச்செயலாளர் கைது!

தர்மபுரி: நிலம் அபகரிப்பு வழக்கில் வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் புல்லட் கணேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கலீல். இவர், வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடசாமி என்பவருக்கு சொந்தமான பொம்மேபள்ளி என்ற பகுதியில் இருந்த 9 ஏக்கர் 11 சென்ட் நிலத்தை கடந்த 2005ஆம் ஆண்டு வாங்கியிருக்கிறார்.

இந்நிலையில், இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து, வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் புல்லட் கணேசன் தனது மனைவி பெயருக்கு மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த மோசடிக்கு வெலக்கல்நத்ததை சேர்ந்த ராதா மற்றும் ஓய்வு பெற்ற கிராமநிர்வாக அலுவலர் சர்வேஸ்வரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையில் கலீல் கொடுத்தார். அவரின் புகார் அடிப்படையில், வன்னியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் புல்லட் கணேசனை நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளன.

-எம்.புண்ணியமூர்த்தி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!