வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (22/11/2014)

கடைசி தொடர்பு:17:08 (22/11/2014)

வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் (படங்கள்)

சென்னை: சென்னையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் பசுமைத் தாயகம் சார்பில் நடைபெற்றது.
 

சென்னை மாநகராட்சி 167வது வட்டம், ஸ்டேட் பேங் காலனி உடற்பயிற்சி கூடம் அருகில் மற்றும் எதிரில் உள்ள பார்க்கில் மரங்கள் வெட்டப்பட்டது. இதனை கண்டிக்கும் விதமாக, வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் பசுமைத் தாயகம் சார்பில், காஞ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குரோம்பேட்டை நா.கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
 

இந்த போராட்டத்தில் ஆலந்தூர் பகுதி பசுமைத் தாயகம் ஆலோசகர்கள் வெ.கணபதி, உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆலோசகர் கீழ்கட்டளை வெங்கடேசன், நிர்வாகிகள் ஆலந்தூர் துரை, ஜெயராமன், இளங்குமரன், குணசேகர், தனசேகர், இராமமூர்த்தி, கங்காதுரை, முருகேசன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
 

போராட்டத்தின்போது, சுற்றுச்சூழலை பாதுகாப்போம், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும், மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்