மோட்டார் விகடன் சார்பில் சாலை பாதுகாப்பு பிரசார நிகழ்ச்சி!

மதுரை: மோட்டார் விகடன் சார்பில் மதுரையில் சாலை பாதுகாப்பு பிரசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வருடம் தோறும் டிசம்பர் 31ஆம் தேதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி பிரசுரம் விநியோகிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை மோட்டார் விகடன் மாத இதழ் நடத்தி வருகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கும் இந்நிகழ்வு இன்று மதுரையில் மூன்று இடங்களில் நடந்தது.

மதுரை, கோரிப்பாளையம் சிக்னலில் மாநகராட்சி ஆணையாளர் சி.கதிரவன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கி துவக்கி வைத்தார். விகடன் நிறுவன ஊழியர்களும், தன்னார்வ கல்லூரி மாணவர்களும் பிரசுரம் வழங்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

இதேபோல் காளவாசல் சிக்னல், பெரியார் பேருந்து நிலைய சிக்னல்களிலும் விழிப்புணர்வு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

செ.சல்மான்

படம்: பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!