வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (22/02/2017)

கடைசி தொடர்பு:14:21 (22/02/2017)

தஞ்சையில் தென்னிந்திய நாடகத் திருவிழா!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில்,  தென்னிந்திய மக்கள் நாடக விழா தஞ்சாவூரில்  நடைபெறுகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக, தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 400 - க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள் வருகை தந்துள்ளனர். பறையிசை மூலம் நாடகக் கலைஞர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த, நாடகக் கலைஞர்கள்  பங்கேற்றுள்ளனர். நான்கு நாள்கள் நடைபெறவுள்ள  இந்த நாடகத் திருவிழாவில், பல்வேறு வகைப்பட்ட நாடகங்களை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தவுள்ளனர். நாடகக் கலையை அழியாமல் பாதுகாப்பதற்கு, இதுபோன்ற நாடக விழாக்கள் அவசியப்படுகின்றன. மேலும், இதன்மூலம் மக்களுக்கும் நாடகம் மீதான விருப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் உருவாகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க