சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை எரித்துக் கொன்ற தந்தை..! - மதுரையில் வெறிச் செயல்

மதுரை அருகே சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்ட மகளை, அவரது தந்தையே எரித்துக் கொன்ற சம்பவம் தற்போது வெளியே தெரிய வந்துள்ளது..

fire

மதுரை வீராளம்பட்டியைச் சேர்ந்த பெரிய கார்த்திகேயனின் மகள் சுகன்யா, பூபதி என்பவரைக் காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுகன்யாவின் பெற்றோர் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து இருவரும் ஈரோட்டில் வசித்து வந்தனர். இதனிடையே ஊர் திருவிழாவில் பங்கேற்க வந்த பூபதியை சுகன்யாவின் பெற்றோர் அடித்து விரட்டியுள்ளனர். சுகன்யாவையும் இழுத்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து பூபதி காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சுகன்யா இறந்துவிட்டதாக தகவல் பரவியதையடுத்து காவல் துறை நடத்திய விசாரணையில் சுகன்யாவின் தந்தை, அவரது சகோதரர்கள் பாண்டி கண்ணன், சுந்தரம், மற்றும் அவர்களது அத்தை லட்சுமி ஆகியோர் சுகன்யாவை எரித்துக் கொலை செய்த சம்பவம் தெரிய வந்துள்ளது. அவர்கள் கூறிய இடத்தில் காவல்துறையினர் ஆய்வு செய்ததில் எரிந்து போன நிலையில் இருந்த எலும்புகள் கிடைத்துள்ளன. கிடைத்த எலும்புகள் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதையடுத்து சுகன்யாவின் தந்தை மற்றும் அத்தை லட்சுமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!