தந்தை-மகள் கொலை வழக்கில் திருப்பூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருப்பூரில் தந்தை-மகள் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தூக்கு

திருப்பூரில் 2015-ம் ஆண்டு பணத் தகராறில் விசைத்தறித் தொழிலாளி தங்கவேல் (45) மற்றும் அவரின் மகள் மகாலட்சுமி(11) ஆகியோர் கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய செல்வம், ரங்கராஜ் உள்ளிட்டவர்களைக் கைது செய்தது காவல்துறை. திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுவந்தது.

இதனிடையே, கொலை செய்யப்பட்ட மகாலட்சுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும் பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, செல்வம், ரங்கராஜுக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கில் தொடர்புடைய தெய்வசிகாமணி, நாகராஜ், ஆனந்தன் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!