Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குண்டும் குழியுமாகக் கிடக்கும் சாலை... நாம் தமிழர் கட்சியின் 'விபத்து' போராட்டம்!

தூத்துக்குடியில், சாலையைச் சீரமைக்ககோரி நாம் தமிழர் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்து

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் அமைந்துள்ளது பாரதி நகர். இப்பகுதியில் சாலைகள் உடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. சாலையைச் சீரமைக்கக் கோரி நகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டும் முறையான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. சுமார் மூன்று வருடங்களாக இந்தச் சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதாகப் பொதுமக்கள் தரப்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனிடையே  இன்று நாம் தமிழர் கட்சியினர், சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் பைக் ஒன்றை கவிழ்த்து, ஒருவரின் கை, கால்களில் கட்டுப்போடப்பட்டு அமரவைக்கப்பட்டிருந்தார். விபத்தில் அடிபட்டும் சாலையைச் சீரமைக்க அவர் போராட்டத்தில் இறங்கியிருப்பது போன்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பி 'விபத்து' போராட்டம் நடத்தினர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close