தேனி மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் வேலையில்லா இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ம் தேதி நடைபெற இருக்கிறது.

பெரியகுளம் - மதுரை ரோட்டில் அமைந்துள்ள தங்கம் முத்து பாலிடெக்னிக் வளாகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில், 18 வயது முதல் 35 வயதுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளோமா, பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு படித்தவர்கள் கலந்துகொள்ள முடியும். இம்முகாமில், சென்னை, கோவை, திருப்பூர், மதுரை மற்றும் நாகர்கோவில் போன்ற பெருநகரங்களிலிருந்து டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட் கார்மென்ட்ஸ், மோட்டார் உதிரிபாகங்கள், கட்டுமானத்துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்துகொண்டு தகுதியுடையவர்களைத் தேர்வுசெய்ய இருக்கிறார்கள். முகாமில் கலந்துகொள்ள வருபவர்கள், கல்விச்சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!