தைவான் நாட்டு தமிழ் கவிஞருக்கு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம்


திருக்குறளை தைவான் நாட்டு மொழியான மாண்டரின் மொழியில் மாற்றம் செய்த தைவான் கவிஞர் யூசிக்கு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் மதிப்புறு முனைவர் பட்டத்தை நாளை வழங்குகிறார். 
தைவான் நாடு பாங்கியுவான் நகரத்தைச் சேர்ந்த யூசி கடித இலக்கியத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். ஏறத்தாழ 60 நூல்களை எழுதியுள்ளார். இவரின் படைப்புகளில் தனித்துவமான மொழிநடைகளில் எழுதப்பட்ட 6 லட்சம் சொற்களுக்கும் அதிகமான நாவல் படைப்பு குறிப்பிடத்தக்கது.

திருக்குறளை
தமிழ்மீது பற்றுகொண்ட இவர் தமிழுக்கு ஆற்றிவரும் தொண்டு அளவிடமுடியாத ஒன்றாகும். மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், ஆத்திச்சூடி பாடல்களை சீன நாட்டின் மாண்டரின் மொழியில் மொழிபெயர்த்து சாதனை நிகழ்த்தியவர் யூசி. தைவானில் தமிழுக்கு சங்கம் தொடங்கியவர் யூசி. திருக்குறள் நூலை முழுமையாக தைவானின் மாண்டரின் மொழியில் மொழியாக்கம் செய்தவர். 
யூசியின் தமிழ்த் தொண்டை பாராட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தங்கத்தில் செய்யப்பட்ட புத்தர் சிலையைப் பரிசாக வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில்தான் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் யூசி திருக்குறளை மாண்டரின் மொழியில் மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
தமிழ்மீது பற்றுக்கொண்ட யூசிக்கு நாளை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழதத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்குகிறார் கவர்னர் வித்யாசாகர் ராவ்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!