வெளியிடப்பட்ட நேரம்: 21:52 (02/08/2017)

கடைசி தொடர்பு:21:52 (02/08/2017)

ராணுவ முகாமில் வதைப்படும் மாநில அரசின் டிரைவர்கள்

ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டுத் திடலில் நேற்று (1-ம் தேதி) முதல் துவங்கியது. ராணுவ அதிகாரிகளை அழைத்துச் செல்வதற்காக தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு உள்ளிட்ட ஒன்றிய சேர்மன் வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டது. 

வதைப்படும் மாநில அரசின் டிரைவர்கள்


இந்த ராணுவ முகாமில் மாநில அரசின் வாகனங்களை ஓட்டும் டிரைவர்களுக்கு சாப்பாடு வழங்கப்படாததால் கலக்கத்தில் இருக்கிறார்கள் டிரைவர்கள். இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத டிரைவரிடம் பேசினோம், ''ராணுவ அதிகாரிகள் தங்கியிருக்கும் ஹோட்டல்களுக்கு விடியற்காலை 3 மணிக்குச் சென்று அழைத்துக் கொண்டுப்போய் ராணுவ வீரர்களை தேர்வு செய்யும் மைதானத்தில் விட வேண்டும். அவர்கள் எங்கே போகச் சொல்கிறார்களோ அங்கே போக வேண்டியதுதான் எங்கள் வேலை. எங்களுக்கு டீ கூட கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க, சரி காலையில் சாப்பிடப் போனால் உங்களுக்கெல்லாம் சாப்பாடு கிடையாதுன்னு விரட்டி அடிச்சுட்டாங்க. இதனால் காலையில் சாப்பிடாம மதியமும் சாப்பிடாம இருந்தோம். அதிகாரி எந்த நேரத்தில் கிளம்புவாருன்னு தெரியாததால, எங்களால் வெளியில் சென்று சாப்பிடவும் முடியல, வெளியில் செல்லவும் விடமாட்டேங்குறாங்க. இரவு 10 மணிக்கு மேல்தான் எங்களை விடுகிறார்கள். வீட்டுக்கு போய்விட்டு விடியற்காலையிலேயே வரவேண்டும். 3 மணிக்கே வருவதால், சாப்பாடு செஞ்சும் கொண்டு வரமுடியவில்லை. 2-வது நாளான இன்றும் எங்களுக்கு சாப்பாடு இல்லையென்று சொல்லிவிட்டார்கள். வெளியில் சாப்பிடப் போனால், 10 நிமிடத்தில் வரவேண்டுமென சொல்கிறார்கள். 3 கி.மீ சென்று சாப்பிட்டுவிட்டு 10 நிமிடத்தில் எப்படி வரமுடியும்'' என்றார் மாநில அரசின் டிரைவர் ஒருவர் பரிதாபமாக.  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க