சினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது ஏன்? உண்மையைச் சொல்லும் ஊர் மக்கள்! | Snehan's relatives reveal Secret behind his hug

வெளியிடப்பட்ட நேரம்: 21:36 (16/08/2017)

கடைசி தொடர்பு:21:36 (16/08/2017)

சினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது ஏன்? உண்மையைச் சொல்லும் ஊர் மக்கள்!

சினேகனின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள புதுகரியப்பட்டி கிராமத்தைக் கண்டுபிடித்த நாம், கிராம மக்களிடமும் பேசினோம். ``செல்வம் (சினேகன்) அண்ணன், எப்படி `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கட்டிப்பிடிச்சுப் பேசுவாரோ... ஊருக்கு வந்தா அப்படித்தான் எல்லோர்கிட்டயும் பேசுவார்'' என்றனர்.

சினேகன் இதுகுறித்த விரிவான விளக்கத்தைத் தேடித் திரிந்தபோது தென்பட்ட மணிகண்டனிடம் பேசினோம்...

``எங்க ஊர்ல டிவி-யை ஆன் செய்து சீரியல் பார்க்கிறார்களோ இல்லையோ, `பிக் பாஸ்' நிகழ்ச்சியைக் கட்டாயம் பார்ப்போம். கஞ்சா கருப்பு, பரணி அண்ணன் எல்லாம் எவிக்ஷன்ல வெளியே போயிட்டாங்க. செல்வம் (சினேகன்) அண்ணன் எலிமினடே் ஆகாமல் இருக்கிறார். டீமில் ஏதாவது பிரச்னைன்னா, அதை சுமுகமான முறையில் தீர்ப்பதற்கான முயற்சியில் அவர் இறங்கிவிடுவார். அந்த நேரங்கள்ல எதிரில் இருப்பவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து, வலி மற்றும் வேதனைகளைப் புரிஞ்சுக்கிட்டு ஆறுதல் சொல்வார். அப்படிச் சொல்லும்போது கட்டிப்பிடிச்சபடி சொல்வது அவருடைய இயல்பு.

எங்க ஊருக்கு செல்வம் அண்ணன் வந்தா, பெரிய ஆளுங்கிற கெத்தெல்லாம் காட்டிக்கவே மாட்டார். எல்லோர்கிட்டயும் சகஜமா பேசுவார். `எப்படி இருக்க... நல்லா படிக்கிறியாடா?'ன்னு உரிமையா கேட்பார். எல்லோர்கிட்டயும் சிரிச்சு, சிரிச்சுப் பேசுவார். எங்களுக்கு ஏதாவது கஷ்டம்னு விஷயத்தைச் சொன்னா, எமோஷனாகி அழுதிடுவார். ஓவியாவோட லவ் ஸ்டோரி ஓடிக்கிட்டிருந்தப்ப, கமல் சார் பேட்டி எடுக்கும்போது செல்வம் அண்ணன் அழுதுட்டார். அதைப் பார்த்தப்ப எங்களுக்கும் அழுகை வந்துடுச்சு. செல்வம் (சினேகன்) அழுதது குறித்து எங்க ஊர்ல ஒரு பட்டிமன்றமே நடந்தினாங்க. செல்வம் அண்ணன் ஊருக்கு வந்துச்சுன்னா, யாருக்கு உடம்பு சரியில்லன்னாலும் வந்து பார்க்கும். அவருடைய கவிதை, பாடல்கள் எல்லாம் ஆண், பெண் பார்க்காம சமமா, சகஜமாத்தான் எழுதியிருப்பார். அதைக் கவனிச்சாலே தெரியும்.  `பிக் பாஸ்'ல இருக்கிற மாதிரியேதான், ஊருக்கு வந்தா எல்லோர்கிட்டயும் இருப்பார்'' என்றார்.

அடுத்து மகேஷ்வரன் பேசினார்...

``நிகழ்ச்சியில் அவர் உருக்கமா பேசுறதுக்கும் எமோஷனல் ஆகுறதுக்கும் காரணம், அவர் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வளர்ந்ததுதான். எல்லோர்கிட்டயும் அன்பாக இருப்பார். உணர்ச்சித் ததும்பப் பேசுவதுதான் அவருடைய இயல்பு. எப்பவும் `அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுறார்'ன்னு சொல்றாங்க. யார்கிட்டப் பேசினாலும் பழகினாலும்  உரிமையோடு பழகுவார். செல்வம் அண்ணன் இப்ப  ஊருக்கு அதிகமா வர்றதில்லை. `நிகழ்ச்சிக்காகப் பேசுறார்'னு சொல்றாங்க. அது உண்மையில்லை. குடும்பத்தைப் பிரிஞ்சு தனிமையா இருக்கும்போது, பழைய சம்பவங்களை நினைச்சு உணர்ச்சிவசப்படுகிறார். ஊர்ல எந்த முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தாலும், செல்வத்தைத்தான் கூப்பிடுவோம். அவரும் வந்து கலந்துக்குவார். பொங்கல்னா ஊர்ல வந்து சாமி கும்பிடாமப் போக மாட்டார்.''

மகேஷ்வரன்   மண¤கண்டனிடம்

சிவக்குமாரிடம் பேசினோம்...

``செல்வம் (சினேகன்) ஆறு பேருடன் பிறந்தவர். இவர்தான் கடைக்குட்டி. ஆரம்பத்துல கஷ்டப்பட்டவர். பாடலாசிரியர், நடிப்புனு எல்லாத்துலயும் திறமையானவர். அவருடைய அண்ணன், தம்பிகள் நல்லா இருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் செல்வம் (சினேகன்) தான். முன்பு மாதிரி இப்ப ஊருக்கெல்லாம் வந்தா ரொம்ப நாள் தங்குறதில்லை. அப்படியே வந்தாலும் ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம்தான் இருப்பார்.

`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் செல்வம் (சினேகன்) கட்டிப்பிடிச்சுப் பேசுவது பற்றி நிறைய விமர்சனங்கள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் வந்துச்சு. நம்முடைய கலாசாரம் மாறிக்கிட்டிருக்கு. இந்தக் காலத்துல கட்டிப்பிடிச்சு அழுறது தவறான கருத்தாகவோ, கிராமப் புறங்களில் தப்பான கருத்தாகவோ, குற்றமாகவோ தெரியலை. ஏன்னா, எங்க ஊருக்கு அவர் வந்தா, அப்படித்தான் எல்லோர்கிட்டயும் பேசுவார். அவரின் சுபாவமே அதுதான். பாசத்துக்கு அடிபணிவார். டிவி-யில் அவர் நடந்துகிட்டவிதமும் அப்படித்தான் காட்டுது'' என்றார். 

``ரெண்டு மாசங்களுக்கு முன்னாடி செல்வம் (சினேகன்) அண்ணன் ஊருக்கு வந்துச்சு. `எப்ப அண்ணே வந்தீங்க?'ன்னு கேட்டேன். `இப்பதான் வந்தேன். அப்பாவைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்திருக்கிறேன்'னு சொன்னார். `நல்லா இருக்கியா?'ன்னு என்னை விசாரிச்சார். `ஊரெல்லாம் எப்படி இருக்கு, பசங்கெல்லாம் எப்படி இருக்கானுங்க, எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுப்பா'ன்னு சொன்னார். `அடுத்தமுறை வரும்போது எல்லோரையும் சந்திக்கிறேன்'னு செல்வம் (சினேகன்) சொன்னார்'' என்றார் மணி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்