ஹலோ வாசகர்களே..!

மிகப் பெரிய வெடிகுண்டு என எல்லோரும் எதிர்பார்த்த கறுப்புப் பண விவகாரம், நமத்துப்போன பட்டாசு போல வெடிக்காமலே போயிருக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் 627 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசாங்கம் ஒப்படைக்க, அதை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் தந்து, விசாரிக்க சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்தப் பட்டியல் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கடந்த ஜூன் முதலே இருக்கிறது என்பதுதான் வேடிக்கை.

இந்த விவகாரத்தில் தேவையற்ற பரபரப்பு அனைத்துப் பிரிவினரிடமும் இருப்பதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தப் பணத்தை எளிதில் கொண்டு வந்துவிட முடியும் என்று நினைத்தே பலரும் பேசுகின்றனர். பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோதும் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி காங்கிரஸுக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியது. அந்த தர்மசங்கடம் இப்போது பாரதிய ஜனதாவுக்கு வந்துசேர்ந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் மூலம் பாரதிய ஜனதா தனக்குள்ள பொறுப்பில் இருந்து தப்பித்துவிட்டதாக நினைக்கிறது.

ஆனால், கறுப்புப் பண விவகாரத்தில் பாரதிய ஜனதா தந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்றால், இதில் உள்ள சிக்கல்களைக் களையும் காரியத்தில் இறங்க வேண்டும். இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் இருக்கிற வரை வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை வைத்திருப் பவர்களின் பெயர்களை வெளிப்படையாக சொல்ல முடியாது. அப்படி சொன்னால், விரும்பத்தகாத பல விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுபற்றி எல்லாம் கவலைப்படாமலே கடந்த காலங் களில் பல ஒப்பந்தங்களில் நாம் கையெழுத்துப் போட்டிருக்கிறோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம்.

இனியாவது, இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்முன் எதிர்காலத்தில் அதனால் நமக்கு தீங்கு விளையுமா என்று ஆராய்ந்தபின்பே ஏற்க வேண்டும். ஏற்கெனவே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் உள்ள நிபந்தனைகளை உடைத்தெறியும் வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இவையெல்லாம் நடந்தால் மட்டுமே கறுப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வருவது சாத்தியப்படும்.

இது நடக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும்போது மக்களுக்கு அநாவசியமான வாக்குறுதிகள் தந்து ஏமாற்ற நினைத்தால், அவர்களின் நம்பிக்கையை விரைவில் இழக்க நேரிடும்!

- ஆசிரியர்.