Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

நமக்குள்ளே...

Published:Updated:

தீபாவளி முடிந்த பிறகும், அந்தக் கொண்டாட்டத்தின் குதூகலிப்பு பற்றிய பேச்சுகள் சில நாட்களுக்கு எதிரொலிப்பது வழக்கம்தானே! யார் யார் எவ்வளவு பட்டாசு கொளுத்தினார்கள்... என்னென்ன புது டிசைனில் துணி எடுத்தார்கள்... எத்தனை விதமான பலகாரங்கள் செய்தார்கள் என்கிற கதைகளுக்கு நடுவே, புருவத்தை உயர்த்தும் அளவுக்கு ஆச்சர்யமூட்டும் சில தகவல்களும் என்னை வந்துசேர, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை தோழிகளே!

நமக்குள்ளே...

நண்பர் ஒருவரின் குழந்தைகள் இருவரும், ’இந்த வருடம் பட்டாசு வேண்டாம்’ என முடிவெடுத்ததோடு, அந்தப் பணத்தில் தங்களுக்குத் தேவையான கேரம்போர்டு, செஸ்போர்டு வாங்கியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு தோழி, முதன்முறையாக தன் உறவினர்கள் எல்லோரையும் ஓரிடத்துக்கு வரவழைத்து, ஒன்றாகச் சேர்ந்து பலகாரம் செய்து சாப்பிட்டு வந்ததாக மகிழ்ச்சியுடன் சொன்னார்.

இன்னொரு தோழி செய்தது... நெகிழ்ச்சியின் உச்சம்! தீபாவளி என்றாலே ஆதரவற்றவர்களுக்கு உடைகள், இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் என பலவற்றையும் தானமாக வழங்கும் பலரைப் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம். இந்தத் தோழியோ கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து, சாலையோரங்களில் தங்கியிருக்கும் ஏழைப் பெண்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாழும் பெண்களைச் சந்தித்து, தன்னால் இயன்ற அளவு சானிட்டரி நாப்கின்களை வழங்கியிருக்கிறார் தீபாவளியன்று! அந்த மூன்று நாட்களுக்கான மாற்றுத் துணியை துவைக்கவும், காய வைக்கவும்கூட இயலாமல் அவதிக்கு உள்ளாகும் இதுபோன்ற சாலையோரப் பெண்களிடம் இவர் காட்டிய அக்கறை, அவர் மீதான மரியாதையைக் கூட்டுகிறதுதானே தோழிகளே!

சரி, இதையெல்லாம் தீபாவளி அன்றும் மட்டும்தான் செய்ய வேண்டுமா என்ன?

நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தனித்துவிடப்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியோர் என்று ஏராளமானோர் அனாதைகளாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பிச்சை எடுப்பது, பிழைப்புக்காக சின்னச் சின்ன வியாபாரம் செய்வது என்றிருக்கும் இதுபோன்றவர்களின் வாழ்க்கை... பரிதாபத்திலும் பரிதாபமே! பண்டிகை நாட்கள், மணநாள், பிறந்த நாள் என்று ஒவ்வொரு கொண்டாட்டத்தின்போதும், இதுபோன்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால், அந்த நாட்களும் நமக்கு தீபாவளியாக இனிக்கும்தானே!

உரிமையுடன்,

நமக்குள்ளே...

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism