ஹலோ வாசகர்களே..!

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்கிற மாதிரி, ஆர்பிஐ கடந்த சில ஆண்டுகளாக கறாராகப் பின்பற்றிவரும் நிதிக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளின் காரணமாக, தற்போது பணவீக்கமானது கணிசமாகக் குறைந்துள்ளது. நுகர்வோர் பணவீக்கமானது கடந்த அக்டோபர் மாதத்தில் 5.5 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த 2012 ஜனவரிக்குப் பிறகு, தற்போது வந்திருக்கும் நுகர்வோர் பணவீக்கமே மிகக் குறைவானதாகும். அதுமட்டுமல்ல, கடந்த அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை குறியீட்டு எண் 1.77 சதவிகிதத்தை எட்டியுள்ளது. இது, கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவாகும்.

பணவீக்கம் இப்படி வேகமாகக் குறைந்துவரும் நிலையில், கடன் களுக்கான வட்டி விகிதத்தை ஆர்பிஐ குறைக்க வேண்டும் என்கிற தொழில் துறையினரின் கோரிக்கை இன்னும் உரத்த குரலில் கேட்கத் தொடங்கி இருக்கிறது. 2015, ஜனவரிக்குள் பணவீக்கமானது 8 சத விகிதத்தை அடைய வேண்டும் என்பதுதான் ஆர்பிஐயின் இலக்கு. ஆனால், இப்போதே அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டதால், வட்டி விகிதத்தை ஏன் குறைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர் தொழில் துறையினர்.

தவிர, கடந்த செப்டம்பர் மாதத்தில் முக்கிய தொழில் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2.5 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இது வெறும் 0.4 சதவிகிதமாகவே இருந்தது. இந்த வளர்ச்சியை ஊக்குவிக்க கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தால், தொழிலை விரிவுபடுத்தவும், அதன்மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், பெருளாதாரம் மேலும் வளர்ச்சி காணவும் உதவுமே என்று தொழில் துறையைச் சேர்ந்தவர்கள் கேட்பது நியாயமாகவே தெரிகிறது.

பணவீக்கத்தைக் குறைத்து, அதை உறுதியான கட்டுப்பாட்டில் கொண்டு வந்தே தீருவது என்பதில் ஆர்பிஐக்கு இருக்கும் அக்கறையை யாரும் குறைசொல்ல முடியாது. கடந்த சில ஆண்டுகளில், அதிலும் குறிப்பாக, ஆர்பிஐ கவர்னராக ரகுராம் ராஜன் பதவியேற்றபின், இது தொடர்பாக அவர் எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அதேசமயம், தொழில் துறை வளர வேண்டிய இந்தசமயத்தில் அதற்குத் தேவையான உதவிகளை செய்துதராமலும் இருக்க முடியாது. இத்தனை நாளும் பணவீக்கத்தைக் குறைப்பதில் உறுதியாக இருந்த ஆர்பிஐ, இனி வட்டி விகிதத்தைக் கொஞ்சமாவது குறைக்க நடவடிக்கை எடுக்கலாமே!

- ஆசிரியர்.